En Anbu Devan

Roshini

என் அன்பு தேவன் எனைத்தேடி வருகின்றார் என் நெஞ்சில் ஆனந்தமே இருள்சூழும் உலகில் அருள் கோடி தருகின்றார் என் நாளும் பேரின்பமே இறைவா வருவாய் இதயம் எழுவாய் நிறைவாய் நிலையாய் நிதமும் தொடர்வாய்

உள்ளங்கையில் என்னை நீ பொறித்தாய் உயிரான உறவாக உன்னில் இணைத்தாய் தாய் கூட மறந்தாலும் மறவாதவர் தானாக எனை தேடி உறவானவர் இறைவா வருவாய் இதயம் எழுவாய் நிறைவாய் நிலையாய் நிதமும் தொடர்வாய்

கலைமான்கள் நீர் தேடும் கதை போலவே கண்ணான உனைதேடி உளம் வாடுதே அழியாத உணவாக எனில் சேர்ந்து உன் அருளாலே எனை தேற்றி உமதாக்குமே இறைவா வருவாய் இதயம் எழுவாய் நிறைவாய் நிலையாய் நிதமும் தொடர்வாய்

Lyrics Submitted by Bomik Rajan

Lyrics provided by https://damnlyrics.com/