{ பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு } (2)
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
{ காத்தோடு மலராட கார்குழலாட காதோரம் லோலாக்கு சங்கதி பாட } (2)
மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம் அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன் குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்
பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
{ பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண தாளாமல் தடம் பாா்த்து வந்த வழி போக } (2)
சித்திரத்துச் சோல முத்துமணி மாலை மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன் விண்ணிலே நூல் புடிச்சு சேல தச்சுத் தாரேன் ஹோய்
பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
Lyrics Submitted by Keerthana
Lyrics provided by https://damnlyrics.com/