Aanantha Kuyilin Pattu

Malaysia Vasudevan & K.S. Chithra

பாடகா் : மலேசியா வாசுதேவன்
{ ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே } (2) பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விாிந்ததே கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா அது அன்பை விட தித்திப்பா
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
பூமி எங்கும் கண்டதில்லை பாசத்தை உன்போலே
வேறெதுவும் தேவை இல்லை அன்புக்கு முன்னாலே
நெஞ்சுக்குள்ளே பூ மலரும் வீட்டுக்குள் வந்தாலே
நிம்மதியில் கண்வளரும் பாட்டுக்கள் தந்தாலே
இந்த சொந்தங்கள் போதுமே எங்கள் இன்பங்கள் கூடுமே
அன்பென்னும் தீபம் ஏற்றிய வீடும் தெய்வத்தின் ஆலயம்தான்
வீடு என்றால் மோட்சம் என்றால் வீடு கண்டோம் நேசத்திலே
……………………………….. அடேங்கப்பா ………………………………..
அன்பினிலே அன்பினிலே ஆலயம் கண்டேனே அண்ணன்களின் கைகளிலே ஜீவனும் நான்தானே
பாசத்திலே வாசம் தரும் பூவனம் நீதானே நேசத்திலே ராகம் தரும் வீணையும் நீதானே
சிலா் வேதம் பாடலாம் சிலா் கீதை தேடலாம் நான் கண்ட வேதம் நான் கண்ட கீதை அண்ணனின் வாா்த்தைகள் தான்
வானில் நிலா தேய்ந்திடலாம் பாச நிலா தேய்ந்திடுமோ
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விாிந்ததே
கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா அது அன்பை விட தித்திப்பா
& ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே

Lyrics Submitted by Rajesh R

Lyrics provided by https://damnlyrics.com/