Arumbarumba Saram

P. Susheela

அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ தரையினிலே தவழ்ந்து வந்த தங்க நிலா மேனியிது ஆராரோ
மகளே நீ மயங்காதே மணி விழியே கலங்காதே பூச்சூடும் மணி பூந்தேரே கூத்தாடும் பசும் பாலாறே
அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ தரையினிலே தவழ்ந்து வந்த தங்க நிலா மேனியிது ஆராரோ
ஒருவன் இசையினிலே விரித்த வலையினிலே இரையாக நான் விழுந்தேனே மனிதன் குணங்களையும் மாறும் நிறங்களையும் அறியாமல் நான் இருந்தேனே
நஞ்சை விட கொடிது ஆடவனின் மனது அன்னை இதை அறிந்தால் அல்லல் பட்ட பிறகு
ஏமாந்தால் தாயும் என்னை போல நீயும் ஆசை வைக்காதே பின்பு அவதி படாதே
அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ தரையினிலே தவழ்ந்து வந்த தங்க நிலா மேனியிது ஆராரோ
புதிய தலைமுறையே வளரும் இளம் பிறையே தேயாமல் வாழ்ந்திடு நீயே இளமை தலை விரிக்க எனையே விலை கொடுத்து மடி மீது வாங்கிய சேயே
உன்னை விட எனக்கு சொத்து சுகம் எதற்கு இந்த உயிர் உடலில் உன்னை நம்பி இருக்கு
நாம் காண கூடும் இள வேனில் காலம் மார்பினில் ஆடும் சிறு மாதுளம் பூவே
அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ
மகளே நீ மயங்காதே மணி விழியே கலங்காதே பூச்சூடும் மணி பூந்தேரே கூத்தாடும் பசும் பாலாறே
அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ

Lyrics Submitted by Hari Prasad

Lyrics provided by https://damnlyrics.com/