Yedu Thanthanadi

Seergazhi S. Govindarajan & S. Varalakshmi

ஏடு தந்தானடி தில்லையிலே
ஏடு தந்தானடி தில்லையிலே
அதை பாட வந்தேன்
அவன் எல்லையிலே
ஏடு தந்தானடி தில்லையிலே
அதை பாட வந்தேன்
இறைவனை நாட
இன்னிசை பாட
திருமுறை கூறிடும்
அறநெறி கூட
ஏடு தந்தானடி தில்லையிலே....ஏ ..

ஏட்டிலும் மூவரை
எழுதவைத்தான்
ஆ.... ஆ......
ஏட்டிலும் மூவரை
எழுதவைத்தான்
அந்தப் பாட்டையும்
அவனே பாட வைத்தான்
ஏட்டிலும் மூவரை
எழுதவைத்தான்
அந்தப் பாட்டையும்
அவனே பாட வைத்தான்
நாட்டையும் தமிழையும்
வாழ வைத்தான்
நாட்டையும் தமிழையும்
வாழ வைத்தான்
அவன் நமக்கென்று உள்ளதை
வழங்கிவிட்டான்
நமக்கென்று உள்ளதை
வழங்கிவிட்டான்
ஏடு தந்தானடி தில்லையிலே....ஏ ..

தந்தையும் தாயும் போல்
அவன் இருப்பான்
ஒரு தந்தையும் தாயும்
அவனுக்கில்லை
தந்தையும் தாயும் போல்
அவன் இருப்பான்
ஒரு தந்தையும் தாயும்
அவனுக்கில்லை
அந்நாள் தொடங்கி
இந்நாள்வரையில்
அந்நாள் தொடங்கி
இந்நாள்வரையில்
அவன் அன்றி
ஏதுமே நடப்பதில்லை
அவன் அன்றி
ஏதுமே நடப்பதில்லை
ஏடு தந்தானடி தில்லையிலே....ஏ ..

அப்பரும் சுந்தரரும்
சம்பந்தருமே திரு அருளுடன்
பாடிய தேவாரம்
இப்புவியில் அனைவரும்
அறிந்திடவே அதை
செப்பிடும் சோழரின்
பெரும்குலமே
செப்பிடும் சோழரின்
பெரும்குலமே

ஏடு தந்தானடி தில்லையிலே
ஏடு தந்தானடி தில்லையிலே
அதை பாட வந்தேன்
அவன் எல்லையிலே
இறைவனை நாட
இன்னிசை பாட
திருமுறை கூறிடும்
அறநெறி கூட
ஏடு தந்தானடி தில்லையிலே..

Thank You - Prakash 31.

Lyrics Submitted by Prakash 31

Lyrics provided by https://damnlyrics.com/