Annai Madiyil Kann Thirandhom

S. P. Balasubrahmanyam

அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் உயிரில் உயிர்கள் ஜனனம் ஜனனம் இருந்தால் மரணம் இயற்கை தானடா ஏன் சலனம்
அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
……………………………………
அன்னை என்பவள் அருகில் வந்ததுமே பிள்ளை அறியவே இல்லையே பிள்ளை அன்னையை அறிந்த வேளையில் அன்னை உணரவே இல்லையே
ஓரக் கண்ணிலே உயிரைச் சுமந்தவள் உன்னை தேடியே உலகில் அலைந்தவள் சேரும் இடத்திலே சேர்ந்து விட்டால்
அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
வாழ்வு கொடுத்தவள் வாழ்வு முடிப்பதும் வகுத்த நெறியடா மகனே வாழை விழுவதும் கன்று அழுவதும் வாழ்க்கை முறையடா மகனே
அன்னம் தந்தவள் அனலில் வேகிறாள் அன்பு பிள்ளை நீ அழுது சாய்கிறாய் சுமந்த கடனுக்கா நீ சுமந்தாய்
அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் உயிரில் உயிர்கள் ஜனனம் ஜனனம் இருந்தால் மரணம் இயற்கை தானடா ஏன் சலனம்
அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

Lyrics Submitted by Revathi L

Lyrics provided by https://damnlyrics.com/