பொன் மகளே தேவியம்மா பொற்பனை காளியம்மா ஆலங்குடி நாடியம்மா அறந்தாங்கி வீரமா காளியம்மா
திருவத்தூரில் வாழ்பவளே முத்துமாரி அம்மா.....
திருவேற்காட்டில் அமர்ந்தவளே கருமாரி அம்மா
நாகையிலே வாழ்பவளே நெல்லுக்கடை மாரியம்மா நார்த்தமலை நாயகியாம் நல்லமுத்து மாரியம்மா சக்தி உமையானவளே சமயபுரத்து மாரியம்மா சத்தியமங்கலத்தில் பன்னாரி மாரியம்மா
அகிலம் எல்லாம் உன் ஆட்சி அம்மா உந்தன் அருளாட்சி
தில்லையிலே தில்லைநாயகி திருச்சிற்றம்பலத்தில் பெரியநாயகி தென்மதுரை நகரினிலே தெப்பக்குளத்து மாரியம்மா திருநெல்வேலியிலே காந்திமதி அம்மா பொன்மாரி பொழிபவளே பொள்ளாச்சி மாரியம்மா புதுகையில் அமர்ந்தவளே புவனேஸ்வரி அம்மா
அகிலம் எல்லாம் உன் ஆட்சி அம்மா உந்தன் அருளாட்சி
கோவை மாநகரினிலே தண்டுமாரியம்மா பொண்ணுதாயி
ஈரோட்டு நகரிலே ரெண்டு மாரியம்மா
சின்னமாரி பெரியமாரி சேர்ந்த ரெண்டு
சேலம்மாநகரிலே கோட்டை மாரியம்மா
சிங்கப்பூர் நாட்டிலே வீரமா காளியம்மா
மலைமேலே வாழுகின்ற இஞ்சிபாறை மாரியம்மா மைசூரில் குடி கொண்டாள் மூகாம்பிகை தேவியம்மா
X
அகிலம் எல்லாம் உன் ஆட்சி அம்மா உந்தன் அருளாட்சி
மேல்மலையனூரில் அமர்ந்தவளே ஓம்சக்தி மேல்மருவத்தூரில் கோவில் கொண்ட ஆதிபராசக்தி மயிலையிலே வாழுகின்ற முண்டக கன்னி அம்மா மாங்காடுதனில் வாழும் காமாட்சி அம்மா வீரபாண்டியிலே கௌமாரி அம்மா விஜயவாடாவிலே கனக துர்க்கை அம்மா சிவகங்கை சீமையிலே வெட்டுடையா காளியம்மா சிந்தலைகரையினிலே வெக்காளி அம்மா படபத்திர காளியம்மா பாடகட்டி மாரியம்மா
அகிலம் எல்லாம் உன் ஆட்சி அம்மா உந்தன் அருளாட்சி
கண்ணபுர நாயகியே மாரியம்மா காரைக்குடியிலே கொப்புடையம்மா கோட்டை காளியம்மா கோட்டூரு மாரியம்மா கொடுங்க நல்லூர் பகவதியம்மா சோட்டானிகரை பகவதியம்மா வைரோக மாரியம்மா வைத்தூரு மாரியம்மா
வரங்களை தந்திடுவாள்
வடகாடு மாரியம்மா
கேட்டதெல்லாம் கொடுப்பவளே
கீராத்தூர் மாரியம்மா
தங்க முகம் கொண்டவளே
தஞ்சைமுத்து மாரியம்மா
நெஞ்சமெல்லாம் சிலிர்க்கும்
எங்கள் வெங்கலபிடாரியம்மா
அகிலம் எல்லாம் உன் ஆட்சி
அம்மா உந்தன் அருளாட்சி
திண்டுக்கல் நகரினிலே கோட்டை மாரியம்மா செந்தூரில் கோவில் கொண்ட சந்தன மாரியம்மா வால்பாறை நகரினிலே காமாட்சி அம்மா மங்களக்குறிச்சியிலே முத்துமாரியம்மா ஆனமலை வாழுகின்ற மாசாணியம்மா பெரிய பாளையத்தில் பாளையத்தம்மா பெரம்பூரில் வாழுகின்ற வீரமா காளியம்மா பட்டுக்கோட்டை நாடியம்மா பார்த்தருள வேண்டுமம்மா
*அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியே அரிய நாச்சி அம்மா........ என் உயிர் காத்த தாயே இராஜ கோபாலபுரம் வாழுகின்ற முத்துமாரியம்மா......
Lyrics Submitted by Albatxoss
Lyrics provided by https://damnlyrics.com/