Vaanile Magimai (Christmas Song)

Sujatha Selwyn

வானிலே மகிமை பூமியில் அமைதி
மனுஷரில் பிரியம் உண்டாகட்டும்
வானிலே மகிமை பூமியில் அமைதி
மனுஷரில் பிரியம் உண்டாகட்டும்

அதிசயமானவர் இவர் ஆலோசனைக் கர்த்தர்
வல்லமை தேவனாம் நித்தியமானவர்
இவரே நம் சமாதான பிரபு - வானிலே

தூதர்கள் பாடிடும் தேவனின் மைந்தனாம்
சாஸ்திரிகள் மேய்ப்பர்கள் பணிந்திடும் பாலனாம்
இவரே யூதரின் ராஜாவானவர் - வானிலே

இருளினில் வெளிச்சமாய் இகத்தினில் உதித்தவர்
பாவங்கள் போக்கவே பாரினில் வந்தவர்
இவரே நம்மை மீட்கும் இரட்சகர் - வானிலே

Lyrics Submitted by Ratchanniya Samuel

Lyrics provided by https://damnlyrics.com/