damnlyrics.com

Chellamey

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

செல்லமே செல்லமே மகிழ்வதெல்லாமே உன்னாலே செல்லமே செல்லமே அணைக்க யாருண்டு உன் போலே சிரிப்பது உன் கண்ணில் என் இன்பம் நான் காணத்தான் அழுவது உன் தோளில் கண் மூடி நான் சாயத்தான் கடவுள் என்றேன் அதை மறுத்தாய் மறுத்திடினும் நீ என் மறு தாய்

செல்லமே செல்லமே மகிழ்வதெல்லாமே உன்னாலே செல்லமே செல்லமே அணைக்க யாருண்டு உன் போலே

கட்டுக்கடங்கா சினத்தில் நான் எரியும் போதும் கட்டியணைத்தே அணைத்திடும் கனிவு போதும் நான் தூங்க கனவு கதைகள் சொல்வாய் நான் வாழ உனது கனவை கொல்வாய்

நான் என்ன செய்தாலும் பொறு எப்போதும் என்னோடு இரு மழலையின் நகரமாய் சிறுமியின் நகரமாய் பதின்மம் நான் அடைகையில் எனக்கு நீ சிகரமாய் செல்லமே

செல்லமே செல்லமே மகிழ்வதெல்லாமே உன்னாலே செல்லமே செல்லமே அணைக்க யாருண்டு உன் போலே சிரிப்பது உன் கண்ணில் என் இன்பம் நான் காணத்தான் அழுவது உன் தோளில் கண் மூடி நான் சாயத்தான் கடவுள் என்றேன் அதை மறுத்தாய் மறுத்திடினும் நீ என் மறு தாய்

Lyrics Submitted by Ashok

Enjoy the lyrics !!!