damnlyrics.com

Kamam Agatriya - Kavadichindu - Eka

காமம் அகற்றிய தூயன் அவன்

சிவகாம செளந்தரி நேயன் அவன்

மாமறை ஓதும் செவ்வாயன் அவன்

மணிமன்றம் எனும் ஞானஆ காயன் அவன்

கல்லை கனிவிக்கும் சூட்சன் அவன்

முடி கங்கைகருளிய கர்த்தன் அவன்

தில்லைச்சி தம்பர சித்தன் அவன் - தேவ

சிங்கம டியுயர் தங்கம் அவன்.

அம்பலத் தாடல்செய் ஐயன் அவன் - அன்பர்

அன்புக் கெளிதரு மெய்யன் அவன்

தும்பை முடிக்கணி தூயன் அவன்- சுயஞ்

சோதி அவன் பரஞ் சோதி அவன்.

சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே!!

சிவசங்கரனை பணிந்தாடுவோம் புகழ் பாடுவோம் தினமே அவன் புகழ் பாடுவோம் தினமே!!

Lyrics Submitted by Aravindh Natarajan

Enjoy the lyrics !!!