damnlyrics.com

Kannaal Modhadhey

பாடகா் : சித் ஸ்ரீராம்

கண்ணால் மோதாதே அழகியே நான் சொன்னால் தீராதே உன்னால் கூழாக உருகவே என் நெஞ்சே ஆறாதே

கனவின் விதை நட்டிட்டாய் கவிதைகளை கற்பித்தாய் முகமும் அகமும் ஒன்றிங்கே நீ என் உள்ளே வீசும் சாரலே

இசை ஒப்பித்தாய் இளமைகளை கொட்டிடாய் பசியும் ருசியும் ஒட்டி தான் காதலிலே நானும் பாதித்தேன்

ரதியே மதியே ஒளியே முன் தேடிவந்து சூடிக் கொள்ளும் கோடி மின்னலே

சஞ்சனா சகியே உயிரே இதமே உன்னாலே நாளும் தான் மூளை மீது விரல் தானே ஓ

பாென் ஆடை போலே உடலிலே அடி என் தோளில் நீயே

சிறகும் விரிய வந்தாய் உறவில் உதயம் தந்தாய் தனியே தனிமை கொன்றிங்கே தாகம் தந்தே யோகம் போதித்தாய்

அசையும் அழகைக் கண்டேன் அறிவின் வளமை கண்டேன் துணிவின் வலிமை கொண்டிங்கே தோற்கின்றேனே மீண்டும் மீண்டும் தான்

ரதியே மதியே ஒளியே முன் தேடிவந்து சூடிக் கொள்ளும் கோடி மின்னலே

சஞ்சனா சகியே உயிரே இதமே உன்னாலே நாளும் தான் மூளை மீது விரல் தானே

ஆறடி நிலமே நான் தான் மானிட மழையே வா வா வானிடம் வரவா தீயால் ஆவி ஆகிறேன்

நாள் தோறும் தாலாட்ட காதருகே பாராட்ட மோகத்தில் சீராட்ட மாறாமல் நீ வேண்டும்

மாயத்தில் மாய்ந்தேனே மல மலவென தேய்ந்தேனே ஒரு முத்தம் கேட்டேனே அதை பெற்றால் வாழ்வேன் நானே

ரதியே மதியே ஒளியே முன் தேடிவந்து சூடிக் கொள்ளும் கோடி மின்னலே

சஞ்சனா சகியே உயிரே இதமே உன்னாலே நாளும் தான் மூளை மீது விரல் தானே ஓ

கண்ணால் மோதாதே அழகியே நான் சொன்னால் தீராதே உன்னால் கூழாக உருகவே என் நெஞ்சே ஆறாதே ஓஹோ

இசை ஒப்பித்தாய் இளமைகளை கொட்டிடாய் பசியும் ருசியும் ஒட்டி தான் காதலிலே நானும் பாதித்தேன்

ரதியே மதியே ஒளியே முன் தேடிவந்து சூடிக் கொள்ளும் கோடி மின்னலே

சஞ்சனா சகியே உயிரே இதமே உன்னாலே நாளும் தான் மூளை மீது விரல் தானே

அழகே அழகே அமுதே அமுதே சகியே சகியே

Lyrics Submitted by Raghavan

Enjoy the lyrics !!!