damnlyrics.com

Kannukkulle Kadhala

கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா என்னை ஏதோ செய்கிறாய் என்னில் ஏதோ கொய்கிறாய் மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய் என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்

நான்கு கண்கள் உள்ளதே உன் காதல் ஒன்று தான் கண்டுகொண்டேன் நானும் அதை உன்னால் இன்று தான்

கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா ஆஆ

ஊரறிந்த செய்தி காதல் உயிரை வாங்கும் வியாதி அதை வருமுன் தடுக்கும் தடுப்பு ஊசி உலகில் இல்லையே

உன்னை பற்றி பாட தமிழில் எங்கு வார்த்தை தேட அதன் பதினெட்டு மெய்யும் பன்னிரு உயிரும் போதாதல்லவா

நீ ஆசை மொழியின் நக கண் தான் நீ நகர்ந்தால் நகரும் நகரம் தான்

நீ கள் ஜாதியில் சைவம் தான் உன் அசைவால் நானே அசைவம் தான்

தலைக்கேறும் போதை தடுமாறும் ணே

கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா ஆஆ

……………………….

காவல் நிலையம் சென்று தூக்கம் களவு போச்சு என்று என் விழிகள் இரண்டும் யார் யார் மீதோ குற்றம் சாட்டுமே

உன்னை பற்றி மெல்ல நான் தான் உளவு பார்த்து சொல்ல அடி உன்னை பிடித்து காவல் துறை தான் கூண்டில் ஏற்றுமே

என் இமையை மெதுவாய் வருடாதே என் துயிலை தினமும் திருடாதே

நீ விழியால் மனதை உழுதாயே ஒரு விதையாய் நீயே விழுந்தாயே

உயிர் காதல் பூவே நீ தானே வாழ்வே

கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா என்னை ஏதோ செய்கிறாய் என்னில் ஏதோ கொய்கிறாய் மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய் என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்

நான்கு கண்கள் உள்ளதே உன் காதல் ஒன்று தான் கண்டுகொண்டேன் நானும் அதை உன்னால் இன்று தான்

கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா

Lyrics Submitted by Bala Subramani

Enjoy the lyrics !!!