ச ச க நி ச ப நி ச ச ச ச ச ம க நி ச ப நி ச ச நி ச ச ப ப ப ப ப ப த ம ம ம ம க ம க க ம க ம நி த க ரி ஸ நி
சப்த ஸ்வர தேவி யுனரு இனி என்னில் வர தானம் அருளு நீ அழகில் மம நாவில் வாழு என் கழுவில் ஒளி தீபம் ஏற்று சப்த ஸ்வர தேவி யுனரு
கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம் இனி நாளும் கல்யாண ராகம் இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்
பார்வை உன் பாதம் தேடி வரும் பாவை என் ஆசை கோடி….. பார்வை உன் பாதம் தேடி வரும் பாவை என் ஆசை கோடி இனி காமன் பல்லாக்கில் ஏறி நாம் கலப்போம் உல்லாச ஊரில்
உன் அங்கம் தமிழோடு சொந்தம் அது என்றும் திகட்டாத சந்தம் கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்
கைகள் பொன்மேனி கலந்து மலர் பொய்கை கொண்டாடும் விருந்து கைகள் பொன்மேனி கலந்து மலர் பொய்கை கொண்டாடும் விருந்து இனி சொர்க்கம் வேறு ஒன்று எதற்கு எந்த சுகமும் ஈடில்லை இதற்கு
மனம் கங்கை நதியான உறவை இனி எங்கே இமை மூடும் நிலைமை கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்
நீரில் நின்றாடும் போதும் சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும் அது நேரில் நீ வந்த மாயம் இந்த நிலைமை எப்போது மாறும்
என் இளமை மழை மேகம் ஆனால் உன் இதயம் குளிர் வாடை காணும் கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம் இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்
Lyrics Submitted by Karthik