மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம் நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம்
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம் என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
இது உள்ளம் பல வண்ணங்களை அள்ளும் சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா
மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம் ஹ்ம்ம் நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம் கண்ணம்மா
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா ஆஆ
ஜனனம் தந்தால் சலனம் தந்தால் காதல் மொழியில்
மரணம் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் உந்தன் தரவில்
என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள் சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள் மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள் தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்
ஒரு செய்தி அடி நீ என்பது என் பாதி இனி நான் என்பது உன் மீதி தேதி சொல்லம்மா
மௌனம் பார்வையாய் மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம் நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம் கண்ணம்மா
இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும் இரவினை துடைத்ததும் கனவு வரும்
ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும் உணர்விலே கரைந்ததும் கலை வளரும்
மொழி தோன்றாத காலத்தில் நுழைந்தால் என்ன விழி ஜாடைகள் பேசியே நடந்தால் என்ன
என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள் சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள் மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள் தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்
ஒரு வெல்லினத்தை வல்லினமும் கை சேர உன் காம்பியதை தோழி உந்தன் கண்ணாலே பேசு
மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம் நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம்
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம் என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
இது உள்ளம் பல வண்ணங்களை அள்ளும் சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா
Lyrics Submitted by Rajesh R