damnlyrics.com

Pilavunda Malaye (Song)

பிளவுண்ட மலையே

1. பிளவுண்ட மலையே,

புகலிடம் தாருமே;

பக்கம் பட்ட காயமும்

பாய்ந்த செந்நீர் வெள்ளமும்

பாவ தோஷங்கள் யாவும்

போக்கும்படி அருளும்.

2. கண்ணீர் நித்தம் சொரிந்தும்,

கஷ்டதவம் புரிந்தும்,

பாவம் நீங்க மாட்டாதே;

நீரே மீட்பர், யேசுவே.

ஏதுமின்றி ஏழையேன்

உம்மில் தஞ்சம் புகுந்தேன்.

3. வெறும் கையனாய் வந்தேன்,

உம் சிலுவை பற்றினேன்;

எந்தன் நீதி கந்தையே;

உம் அருளால் தாங்குமேன்;

ஜீவ ஊற்றை நாடினேன்;

தூய்மையாக்கேல் மாளுவேன்.

4. நிழல் போன்ற வாழ்வினில்

கண்ணை மூடும் சாவினில்

மறுமைக்கு போகையில்,

நடுத்தீர்ப்புத் தினத்தில்,

பிளவுண்ட மலையே,

புகலிடம் தாருமே.

Lyrics Submitted by JD

Enjoy the lyrics !!!