damnlyrics.com

Pudhu Suriyan

புது சூரியன் என் வீட்டிலே அழகாகதான் விளையாடுதே இரு தோளிலும் சுகம் கூடுதே உன்னை தூக்கி நான் பசி ஆறுவேன்

அருகினில் வளரும் பிறையே வளர்ந்தே பரவும் மழையே வான் நிலவு திரையே திரண்டே ஜொலிக்கும் அழகே

வா சிறந்த மொழியே மடல்கள் திறந்த வழியே நான் உடைந்த சிலையே சிலையில் முளைக்கும் உயிரே

கடல் தாண்டி நீரும் போய் விடுமா கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா

அனுதினம் உன்னை நினைக்கையில் மனம் அணு அணுவாய் துடிக்குது வா திருமுகம் தந்து சிறு விரல் கொண்டு பெரு வழிகளை துடைத்திட வா மறுபடி உன்னை மடியினில் பெற கருவறை தவம் கிடக்குது வா

நீயின்றி நான் வாழ ஆரம்பம் ஏதிங்கே நீதானே நான் வாழ ஆதரவா அன்பே

வான் தாண்டி சூரியனும் தூரங்கள் போய்விடுமா தாய் போல வாழ்வெல்லாம் நியாங்கள் தோன்றுமா

தலை சாய்ந்திடு ஆராரிரோ இமை மூடிடு ஆராரிரோ தலை சாய்ந்திடு ஆராரிரோ இமை மூடிடு ஆராரிரோ

அருகினில் வளரும் பிறையே வளர்ந்தே பரவும் மழையே வான் நிலவு திரையே திரண்டே ஜொலிக்கும் அழகே

வா சிறந்த மொழியே மடல்கள் திறந்த வழியே நான் உடைந்த சிலையே சிலையில் முளைக்கும் உயிரே

கடல் தாண்டி நீரும் போய் விடுமா….. கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா கடல் தாண்டி நீரும் போய் விடுமா…… கரை தாண்டி மீனும் வாழ்ந்திடுமா

Lyrics Submitted by MelodySeeker

Enjoy the lyrics !!!