damnlyrics.com

Vanthenda Paalkaran

ஹோய் வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி

ஹோய் வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

{ தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது மனிதனின் மூளையப்பா } (2)

சாணம் விழுந்தா உரம் பாரு எருவை எரிச்சா திருநீறு உனக்கு என்ன வரலாறு உண்மை சொன்னா தகராறு

நீ மாடு போல உழைக்கலியே நீ மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே

வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

தந்தனா தந்தனா தந்தனா னா தந்தனா தந்தனா தந்தனா னா தந்தானனா தன தந்தானனா தன தந்தனா தந்தனா தந்தனா னா தந்தனா தந்தனா தந்தனா

{ அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு கண்ணதாசன் சொன்னதுங்க பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் நான் கண்டு சொன்னதுங்க } (2)

அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம் அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க

அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு என்னை வாழ வைத்தது தமிழ் பாலு

வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி ஹா அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி

வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

……………………….

Lyrics Submitted by SongBird007

Enjoy the lyrics !!!