வேத வேத ரூபிணி வேதம்பாடும் மாமணி
நாதமான கீதமும் நாடுகின்ற நன்மணி
மாதவத்தின் சக்தி நீ மாறன் பாடும் வேதம் நீ
ஜோதி ஜோதியான நீ சுவர்ண காமாட்சி நீ. x 2.
மங்களத்தின் நங்கையே மதியணிந்த மங்கையே
பொங்குகின்ற கங்கையே பொன்னியான மங்கையே
எங்குமுள்ள சங்கைதீர எண்ணுகின்ற மங்கையே
ஜோதி ஜோதியான நீ சுவர்ண காமாட்சி நீ. x 2.
இன்பமா வாழ்வொளி இனிய ஞான பேரொளி
அன்பு ஆன உள்ளொளி அகில ஞான பேரொளி
துன்பம் போக்கும் தூய ஒளி துரித ஞான பேரொளி
ஜோதி ஜோதியான நீ சுவர்ண காமாட்சி நீ. x 2.
காலை மாலை இரவும் நீ காஞ்சி தந்த வாழ்வு நீ
வேலை வென்ற விழியவள் வேண்டிவந்த வாழ்வு நீ
சோலை தந்த மலரும் நீ சோகமற்ற வாழ்வு நீ
ஜோதி ஜோதியான நீ சுவர்ண காமாட்சி நீ. x 2.
கரும்பும் வில்லும் ஏந்தினால் கவலை தீர்க்க ஆடினாள்
விரும்புகின்ற மொழியினாள் விண்ணை ஆளும் விழியினாள்
பருவமாகி முகிலுமாகி பயிலுமான விழியினாள்
ஜோதி ஜோதியான நீ சுவர்ண காமாட்சி நீ. x 2.
தஞ்சை வந்த தாயவள் தகைமை தன்னைப் பாடுவாம்
பஞ்சமற்ற வாழ்வொடு பண்புமிக்க மகவோடு
மஞ்சளோடு திலகமும் மனமிகுந்த மலரொடும்
விஞ்சுகின்ற புகழொடும் விண்ணும் மண்ணும் ஆடுவாள்
ஜோதி ஜோதியான நீ சுவர்ண காமாட்சி நீ. x 2
Lyrics Submitted by RamadeviRajesh