Naan Aayiram - P. Susheela
| Page format: |
Naan Aayiram Lyrics
பாடலாசிரியர் : கண்ணதாசன்
கேட்டாத் தெரியாது கேடு கெட்ட மானிடனே பார்த்தா தெரியாது பாவப்பட்ட ஜென்மங்களே உணர்ந்தால் தெரியுமாடா உத்தமி யார் யார் என்று
நான் ஆயிரம் கண் காளி உனை ஆட்டி வைக்கும் நீலி என் பேரு சொல்லி யாரும் வந்தா காத்து நிற்கும் தோழி மகமாயி என்றால் என் மஞ்சள் கிடைக்கும் அநியாயம் செஞ்சா என் வஞ்சம் பிறக்கும்
நான் ஆயிரம் கண் காளி உனை ஆட்டி வைக்கும் நீலி
ஈரத்தில் சேலை கட்டி வேப்பில்லை மாலை கட்டி மாவிளக்கேத்தி வச்சுப் பாருங்கடா பாருங்கடா தரையிலே தலைப்பட உருளுங்கடா புரளுங்கடா ஊரையும் கூட்டி வச்சு பிள்ளைக்குப் பேரும் வச்சு கன்னிகை தொட்டில் கட்டி ஆடுங்கடா ஆடுங்கடா மலையில பொறந்தவ மடியில வளருங்கடா
நான் ஆயிரம் கண் காளி உனை ஆட்டி வைக்கும் நீலி என் பேரு சொல்லி யாரும் வந்தா காத்து நிற்கும் தோழி மகமாயி என்றால் என் மஞ்சள் கிடைக்கும் அநியாயம் செஞ்சா என் வஞ்சம் பிறக்கும்
நான் ஆயிரம் கண் காளி உனை ஆட்டி வைக்கும் நீலி
வஞ்சகத்தை நெஞ்சகத்தில் வைக்காதே என்றும் வஞ்சகத்தில் வந்ததெல்லாம் நிக்காதே எதையும் மாத்திக்குவே ஆனா எங்கிட்ட மாட்டிக்குவே அட நீதி நிலைக்கவும் ஊரு தழைக்கவும் காளி வடிவத்தில் பொண்ணு பொறந்தது
வஞ்சகத்தை நெஞ்சகத்தில் வைக்காதே என்றும் வஞ்சகத்தில் வந்ததெல்லாம் நிக்காதே அட அண்டம் குலுங்கிட பூமி அதிர்ந்திட ஆதி சக்தியின் தாண்டவம் அவள் ஆடத் தொடங்கிடும் நேரம் பிறந்தது ஆயிரம் மக்களின் தாண்டவம்
நீ நடந்தா இவ நடப்பா இல்லை பறந்தா இவ பறப்பா நீ ஒழுங்கா கொஞ்சம் இருப்பா இல்ல உன்னைத்தான் இவ பிடிப்பா
குங்கும காளியடா இவ சந்தனமாரியடா ஆயி மகமாயி இவள் நீலி திரிசூலி……… குங்கும காளி சந்தன மாறி ஆயி மகமாயி நீலி திரிசூலி
குங்கும காளி சந்தன மாறி ஆயி மகமாயி நீலி திரிசூலி……
Lyrics Submitted by Hari Prasad
