Vaadikkai Maranthathum - A. M. Rajah & P. Susheela
| Page format: |
Vaadikkai Maranthathum Lyrics
வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை வாட்டிட ஆசை தானோ பல கோடி மலர் அழகை மூடி வைத்து மனதை கொள்ளை அடிப்பதும் ஏனோ வாடிக்கை மறந்ததும் ஏனோ
வாடிக்கை மறந்திடுவேனோ என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ புது மங்கை எந்தன் மனதில் பொங்கி வரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ வாடிக்கை மறந்திடுவேனோ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ
அந்தி நேரத்தின் ஆனந்த காற்றும் அன்பு மணக்கும் தேன் சுவை பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால் உலகம் வாழ்வது ஏது பல உயிர்கள் மகிழ்வதும் ஏது
நெஞ்சில் இனித்திடும் உறவை இன்பம் என்னும் உணர்வை தனித்து பெற முடியாது
ஓஓஓஓஓ ஓஓஓஓ அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா
அன்பு கரங்கள் சேரும் போது வம்பு வார்த்தைகள் ஏனோ இன்ப வேகம் தானோ
வாடிக்கை மறந்திடுவேனோ என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ புது மங்கை எந்தன் மனதில் பொங்கி வரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ வாடிக்கை மறந்திடுவேனோ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ
காந்தமோ இது கண்ணொளி தானோ காதல் நதியில் நீந்திடும் மீனோ
கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ
பொறுமை இழந்திடலாமோ பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ நான் கருங் கல் சிலையோ காதல் எனக்கில்லையோ வரம்பு மீறுதல் முறையோ
& சைக்கிளும் ஓட மண் மேலே இரு சக்கரம் சுழல்வது போலே அணை தாண்டி வரும் சுகமும் தூண்டி விடும் முகமும் சேர்ந்ததே உறவாலே ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Lyrics Submitted by Lakshmi