Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Aalapol Velapol Lyrics


ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல் நானும் அங்கு நின்றிருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா ஆஆ நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்மா ஹோய்
ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்
எம்மனசு மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு
ஓஓஓஓஓஓஓஓ.
கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராடச் சொல்லு மீனாட்சிக் குங்குமத்த.நெத்தியில சூடச் சொல்லு
சொன்னத நானும் கேக்குறேன் சொர்ணமே அங்க போய் கூறிடு
அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு
மாமன் நெனப்புத்தான் மாசக்கணக்கிலே பாடா படுத்துதென்னையே புது பூவா வெடிச்ச ணையே
ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் ஆசை நெஞ்சில் நான் இருப்பேனே
நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல் நானும் அங்கு நின்றிருப்பேனே
வேலங்குச்சி நான் வளைச்சு வில்லு வண்டி செஞ்சி தாரேன் வண்டியில வஞ்சி வந்தா வளைச்சி கட்டி கொஞ்ச வாரேன்
ஆலங்குச்சி நான் வளைச்சு பல்லக்கொன்னு செஞ்சு தாரேன் பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச வாரேன்
வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி
கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்துஊசி மாதிரி
ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும் காத்தா பறந்து வருவேன் புதுபாட்டா படிச்சி தருவேன்
ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல் நானும் அங்கு நின்றிருப்பேனே

பதில் கேளு அடி கண்ணம்மா ஆஆ நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்மா ஹோய் ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல் நானும் அங்கு நின்றிருப்பேனே
Lyrics Submitted by Karthik

Enjoy the lyrics !!!

More lyrics by S.P. Balasubrahmaniyam & K.S. Chithra