Arul Mazhai - E.M.Hanifa



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Arul Mazhai Lyrics


அருள் மழை பொழிவாய் ரஹ்மானே
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே
அண்ணல்நபியை தந்தோனே
ஆதம் நபியின் பிழைதனைப் பொறுத்தே அன்பை பொழிந்தவன் நீயே
நீதி நபியாம் இப்ராஹீமை நெருப்பில் காத்தவன் நீயே
நலம் பெற எந்தன் பாவங்கள் போக்கி
நன்மை வாழ்வளிப்பாயே
(அருள் மழை)
பாவம் பொறுத்தே பண்புடன் நாளும்
வாய்மை கஃபூரும் நீயே
மேவும் துன்பம் யாவும் நீக்கும் மேன்மை சபூரும்நீயே
அரசமுடன் எந்தன் கண்ணீர் துடைத்து
அடைக்கலம் நீ தருவாயே
(அருள் மழை)

எல்லாப் புகழும் உனக்கே சொந்தம் அல்லாஹ் ஏற்றுக்கொள்வாயே
நல்லார் நெஞ்சில் என்றும் வாழும் வல்லமையாளனும் நீயே
பாங்குடன் எந்தன் துஆவை ஏற்று
பாவம் பொறுத்து அருள்வாயே!
(அருள் மழை)
ஆகுக என்னும் குன் என்ற சொல்லால் எ னைத்தையும் படைத்தவன் நீயே
பாங்குடன் குர் ஆன் வேதம் தந்த வாயமையாளனும் நீயே
அனுதினம் உன்னை மறவாதிருக்கும்
ஆற்றல் நீ தருவாயே
(அருள் மழை)
மகத்துவம் ஓங்கும் அர்ஷின் தலைவா
மாண்பு மிகுந்தவன் நீயே
நிகரில்லாத தனியொன் நீயே நேர்மையாளனும் நீயே
இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே
எந்தன் முகம் பார்ப்பாயே
(அருள் மழை)
Lyrics Submitted by Ameen Faizee

Enjoy the lyrics !!!