Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Sendhoora Pandikku Lyrics


……………………………….
செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனைச்சது நிறைவேறும்
நாள செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
உச்சிமேலே முடிஞ்சு வெச்ச மரிக்கொழுந்து வாசம் உன்னுடைய பேரைச் சொல்லி திசை முழுக்க வீசும்
கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம் இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம்
சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பார்த்தாலே
ஆறும் பசியாறும் தானா ஆசை மொழி கேட்டாலே
உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க அம்மம்மாடி அப்பப்பாடி என் மனசு ஒத்துக்காது
அஹாஹா ஹஹ்ஹா செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…ஆ….
லலல லல்ல லல்லால லலலலா லால லலலா லால லலலா லால லால லா
உன்னைச்சேர பொறப்பெடுத்து உருகும் இந்த மாது தெற்கு திசை தென்றலிடும் தினமும் விடு தூது
அம்மன் கோயில் சிலையெழுந்து அசைந்து வரும் போது உள் மனசு தத்தளிக்கும் உறக்கமென்பது ஏது
நீதான் என்னை தீண்ட தீண்ட ஏதோ ஒரு நோயாச்சு
நான்தான் உன்னை சீண்டி சீண்டி பார்த்து ரொம்ப நாளாச்சு
கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவே
ஹஹஹா ஹஹஹா

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட தந்த நன்னா தனன்னா சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட தந்த நன்னா தனன்னா
காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனைச்சது நிறைவேறும்
நாள செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட….
Lyrics Submitted by Savitha M

Enjoy the lyrics !!!